மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தாமதம் அவன் இவன் தாமதம்.

பாலாவின் அவன் இவன் படம் மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தனது வழக்கத்துக்கு மாறாக மிகக் குறுகிய காலகட்டத்தில் அவன் இவன் படத்தை முடித்தார் பாலா. படம் சென்சாரும் செய்யப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம் ஜூன் 10ஆம் தேதியே வெளியாகும் என்றார்கள். இப்போது 10 என்பது 17 ஆக மாறியிருக்கிறது.

விஷாலின் முந்தையப் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ச‌ரி செய்தால் மட்டுமே விஷால் நடித்திருக்கும் அவன் இவனை அனுமதிப்போம் என சிலர் கூறி வருவதுதான் இந்த தாமதத்துக்கு காரணம் என்கிறார்கள்.

தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 17ஆ‌ம் தேதியை தாண்டக்கூடாது என்பது படத்தை தயா‌ரித்திருக்கும் ஏ‌ஜிஎஸ் நிறுவனத்தின் விருப்பம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.