இரண்டு அணிகளாக பிரிந்து நின்ற பாரதிராஜாவும், அமீரும் இப்போது ஓரணியில். எப்படி சாத்தியமானது இந்த சமாதானம்?
பாரதிராஜா அணியை எதிர்த்து அமீர் தலைமையில் சேரன், வசந்தபாலன், சிம்புதேவன், பிரபுசாலமன் உள்ளிட்ட இளம் இயக்குனர்கள் எதிரணி அமைத்து இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்திருந்தனர். இவர்கள் தவிர புதிய அலைகள் என்ற பெயரில் உதவி இயக்குனர்கள் தினி அணி அமைத்திருந்தனர்.
இந்நிலையில் சில மூத்த இயக்குனர்களின் முயற்சியால் பாரதிராஜா அணிக்கும், அவரை எதிர்த்து உருவான அமீர் அணிக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஓரணியாக தேர்தலை சந்திக்கிறார்கள். தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், செயலாளர் பதவிக்கு அமீரும் போட்டியிடுகின்றனர்.
இயக்குனர்கள் இரு அணியாகப் போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் உதவி இயக்குனர்களின் புதிய அலை உள்ளே புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அப்படியானால் கொள்ளை...? அது கிடக்குது புடலைங்காய்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.