ராணா கைவிடப்படவில்லை ஆகஸ்டில் படப்பிடிப்பு என்று கே.எஸ்.ரவிக்குமாரும், செப்டம்பரில் படப்பிடிப்பு என படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகரும் நம்பிக்கை அளித்தாலும் உண்மை வேறாக இருக்கிறது.
ரஜினியின் உடல்நிலை வேகமாக தேறி வருகிறது. இருந்தாலும் அவர் சிறிது காலம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கறாராக கூறியுள்ளனர். முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரோப் கட்டி தொங்குவது கூடவே கூடாது. சரித்திரப் படமான ராணாவுக்கு ரஜினி கடும் உழைப்பை தந்தாக வேண்டும். இப்போதைய சூழலில் அது சாத்தியமே இல்லை.
ஒரு வருட ஓய்வுக்குப் பிறகே ரஜினியால் கடுமையான படப்பிடிப்பை தாங்க முடியுமா என்பதை கூறவே முடியும். இதனால் ராணா படத்திற்காக ஒப்பந்தம் செய்தவர்களை, ஒரு வருடத்துக்கு எந்த வேலையும் இல்லை, வேறு படங்கள் இருந்தால் அதனை கவனித்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறார்கள்.
ஆக, இப்போதைக்கு ரஜினி படம் எதையும் ரசிகர்கள் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.
என் போன்ற ரஜனி ரசிகர்களுக்கு இது ஏமாற்றமளிக்கும் செய்திதான்.....
ReplyDeleteஎன்ன செய்வது