நடிகைகள் எப்போது தும்முவார்கள், கண்டன அறிக்கை விடலாம் என்று காத்திருப்பவர்கள் இந்து மக்கள் கட்சியினர். இவர்களுக்கு உயிரைவிட நடிகைகளின் உடைதான் முக்கியம்.
இந்த முந்திரிக்கொட்டை கட்சி ஸ்ரேயா விஷயத்தில் மூக்குடைபட்டிருக்கிறது.
மராட்டிய அரசின், 25 வயதுக்குள் உள்ளவர்கள் மதுவருந்தக் கூடாது என்ற சட்டத்தை அமிதாப்பச்சன் தொடங்கி இம்ரான்கான் வரை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். இது இந்து மக்கள் கட்சிக்கு ஒரு பொருட்டல்ல. அதேநேரம் ஸ்ரேயா இந்த சட்டத்தை எதிர்த்தார் என்று வதந்திதான் கிளம்பியது. அதற்குள் வரிந்துகட்டி கலாச்சாரத்தை கெடுத்தார், இளைஞர்களை நாசமாக்கினார் இப்படியே போனால் போராட்டம் வெடிக்கும் என்று தங்களது கீறல் விழுந்த ரெக்கார்டை ஓடவிட்டிருக்கிறது இந்து மக்கள் கட்சி. இத்தனைக்கும் ஸ்ரேயா அப்படி எந்த கருத்தும் கூறவில்லை.
அமிதாப்பச்சனும் இம்ரான் கானும் இந்த சட்டத்தை எதிர்த்தபோது கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் ஸ்ரேயா பெயர் அடிபட்டதும் துள்ளி எழுந்த மர்மம் என்ன? குடியை பற்றி ஆண்கள் கருத்து சொல்லலாம் பெண்ணுக்கு உரிமை இல்லை என்ற சனாதன சிந்தனைதானே?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.