விஜய் தொலைக்காட்சி ஒவ்வொரு வருடமும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. சிறந்த நடிகர் மட்டுமின்றி பாப்புலர் நடிகர், பவர்ஃபுல் நடிகர் என்று தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் விருது கொடுத்து வளைத்துவிடுவார்கள். அந்தவகையில் விஜய் டிவி ஒரு சோஷலிஸ்ட்.
சென்ற வருடத்துக்கான விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்ற வருடத்தின் சிறந்த நடிகராக விக்ரம் தேர்வு செய்யப்பட்டு விருது அளித்தனர். ராவண் படத்திற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது அங்காடித்தெருவுக்காக அஞ்சலிக்கு கிடைத்தது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் விருதும் - வசந்தபாலன் - இந்தப் படத்துக்கே கிடைத்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு இசையமைத்த ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த காமெடி நடிகருக்கான விருது சந்தானத்துக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்கும் கிடைத்தது.
எந்திரன் படத்தில் நடித்த ரஜினிக்கு சிறந்த வில்லன் விருது கிடைத்தது. இந்த விருதை தனுஷ் பெற்றுக் கொண்டார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.