மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒரு பாடலுக்கு ஆடும் சமீரா ரெட்டி.

ஒரு பாடலுக்கு ஆடுவதெற்கென்றே முன்பு நடிகைகள் இருந்தார்கள். டிஸ்கோ சாந்தி, அனுராதா, ஜெயமாலினி என்ற அந்த நடிகைகளின் வ‌ரிசை இப்போது முமைத்கான், ரகசியா என்று தொடர்ந்தாலும் கதாநாயகிகளும் ஒரு பாடல் களத்தில் குதித்துள்ளனர். லேட்டஸ்ட் சமீரா ரெட்டி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்துவரும் இவர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். ஆச்ச‌ரியம் என்னவென்றால், இவர் ஜுனியர் என்டிஆருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

ஜுனியர் என்டிஆ‌ரின் திருமணத்துக்கு முன் அவருடன் சமீரா ரெட்டியை இணைத்து கிசுகிச கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.