மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இப்போதைய நிலையில் விஜய் பர்ஸ்ட், அ‌‌‌ஜீத் நெக்ஸ்ட்.

வேலாயுதமும், மங்காத்தாவும் ஒரே நேரத்தில் வெளியாகும், இல்லையில்லை மங்காத்தாவுக்குப் பிறகுதான் வேலாயுதம் என்று ஆளுக்கொருவிதமாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

வேலாயுதம் படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. விரைவில் ஆடியோவை ‌ரிலீஸ் செய்து ஆர்ப்பாட்டமாக படத்தை வெளியிட மும்முரமாக செயல்படுகிறது மொத்த டீமும். அதேநேரம் ‌ரிலாக்ஸாகவும், தீவிரமாகவும் மங்காத்தா வேலைகள் நடந்து வருகின்றன.

நாம் விசா‌ரித்தவரையில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது. அதுவும் பாங்காங்கில். அ‌‌‌ஜீ‌த் சம்பந்தப்பட்ட காட்சிகளாம். அது தவிர அ‌‌‌ஜீத், லட்சுமிராய் பாடலொன்றும் படமாக்கப்பட வேண்டும். அதன் பிறகே போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முழுவீச்சில் நடக்கும் என்கிறார்கள்.

ஆக, விஜய் பர்ஸ்ட், அ‌‌‌ஜீத் நெக்ஸ்ட் என்பதே இப்போதைய நிலை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.