யுகே யில் தெய்வத்திருமகளின் வசூல் சென்ற ஞாயிற்றுக்கிழமையுடன் 40 லட்சத்தை தாண்டியது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிசினஸ் கேந்திரமாகிவிட்டன வெளிநாடுகள். வெளிநாடு வர்த்தகத்தை வைத்தே பட்ஜெட்கள் போடப்படுகின்றன. ஹீரோக்களின் சம்பளத்தையும் இது பாதிக்கிறது.
விக்ரமின் தெய்வத்திருமகள் படம் யுகே யில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் ஐயம் சேம் படத்தின் காப்பியாக இருந்தும் படத்தை கவலையில்லாமல் ரசிக்கிறார்கள். சென்ற வார இறுதியில் 3 திரையிடல்களில் இப்படம் 11,058 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரை இப்படம் யுகே யில் வசூலித்தது 56,499 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 40.85 லட்சங்கள்.
தெய்வத்திருமகளின் யுகே வசூல் 50 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.