
வேலாயுதம், மங்காத்தா படங்களின் ரிலீஸ் குறித்து சம்பந்தப்ஙபட்டவர்களே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் கேரளா விநியோகஸ்தர்கள் இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதிகளை அறிவித்துள்ளனர்.
கேரளாவில் விஜய், அஜீத் இருவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் விஜயக்கு தமிழ்நாட்டைப் போலவே ரசிகர்கள் நிறைந்து உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையைவிட விஜய் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகம்.
மங்காத்தாவின் கேரள உரிமையை வாங்கியிருக்கும் விசியோகஸ்தர் மங்காத்தா ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மங்காத்தா ஆடியோ ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகும் என்று நேற்று முன்தினம்தான் தமிழகத்தில் அறிவித்தார்கள். கேரளாவில் ரிலீஸ் தேதியையே அறிவித்துவிட்டனர்.
அதேபோல் வேலாயுதம் படத்தின் ஆடியோ என்று வெளியிடப்படுகிறது என்பது பற்றி உறுதியான தகவல் இல்லை. ஆனால் கேரள உரிமையை வாங்கியிருப்பவர் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முஸ்லீம் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஓணத்தை ஒட்டிவரும் தேதி என்பதால் 31 ஆம் தேதி படத்தை கண்டிப்பாக வெளியிடுங்கள் என்று விஜய் மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.