யு டிவி தயாரிப்பதாக இருந்த மிஷ்கினின் முகமூடி செப்டம்பர் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது. யு டிவியை வால்ட் டிஸ்னி வாங்கியிருப்பதால் தயாரிப்பு என்னும் இடத்தில் வால்ட் டிஸ்னி பெயர் இடம்பெறும்.
சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான இதில் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். சூப்பர் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம். இதில் நரேன் நடிக்கிறார். ஹீரோயின் அனேகமாக மும்பை மாடலாக இருக்கலாம்.
செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் போது டீஸர் ஒன்றை வெளியிடும் திட்டம் இருக்கிறது மிஷ்கினிடம். படத்தைக் குறித்த முதல் பிரமிப்பாக இந்த டீஸர் இருக்கும் என்று இப்போதே பொடி வைக்கிறது மிஷ்கின் வட்டாரம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.