ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சிம்பு நயன்தாராவிடம் கேட்டது இந்நேரம் தமிழகமெங்கும் தெரிந்திருக்கும். ஒஸ்தியின் ஒரிஜினல் தபாங்கில் இந்தப் பாடல் இடம்பெறுகிறது. குத்துப் பாடல்.
ஆட முடியாது என்று கறாராக மறுத்திருக்கிறார் நயன்தாரா. தாரா இல்லாவிட்டால் வீணா விடமுடியுமா? அவருக்குப் பதில் ஸ்ரேயாவிடம் கேட்டிருக்கிறார்களாம். ஒரு பாடலுக்கு ஆடுவது ஸ்ரேயாவுக்கு புதிதல்ல.
வடிவேலின் இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்துக்காக அவருடன் ஒரு பாடலுக்கு ஆடினார். ஸ்ரேயாவுக்காக பல லட்சங்கள் வாரியிறைத்தார் வடிவேலு. வேறொன்றுமில்லை ஆடுவதற்குதான். பணம் கிடைத்தது... ஆனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இதனால் ஸ்ரேயாவுக்கு பறிபோனது.
சிம்புவுடன் ஆடுவதால் அப்படியொரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஸ்ரேயா கண்டிப்பாக ஆடுவார் என்றே தோன்றுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.