
சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து சென்னை திரும்பியிருக்கும் ரஜினி விரைவில் ஒரு முக்கியமான விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆச்சரியமான தகவல் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அடித்துச் சொல்கிறார்கள், ரஜினி கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வார்.
ரஜினியின் ஆன்மிக ஈடுபாடு அனைவரும் அறிந்தது. கோயம்புத்தூரில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சதாபிஷேகம் இம்மாதம் 20-22 மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. இதில் ரஜினி கலந்து கொள்வார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுவாமியுடனான தனது ஆன்மிக அனுபவங்களை ரஜினி பகிர்ந்து கொள்வார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் இன்றைய நிலையில் அவர் கோயம்புத்தூர் விழாவுக்கு செல்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.