![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzeqE7MRzy1FXUJiexf2xPthqX1NkRih4ebbmsnlqcYS5cdFUQvNCG3aUFxQuDtfhF2Yf2rmLHi8-qsEJ9FLXLF0FjaY6eDqAUhurfySK0siu-MI0-hnPckXVQF_3ApdyqLolxCezq9T8/s400/Vijay+new+Election+Scheme+coming+very+soon+Vijay+S+Music++Anything+for+Vijay+Program+Stills.jpg)
ஊருல உள்ள பாதி பேரை விஜய் மக்கள் இயக்கத்துல சேருங்க... அம்மாகிட்ட சொல்லி எலக்சன்ல நிற்க சீட் வாங்கித் தர்றேன் என்று வருகிற பஞ்சாயத்து எலெக்சனுக்கு இப்போதே பந்தக்கால் போட்டிருக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். உள்ளாட்சி தேர்தல்தான் இவர்களின் முதல் இலக்கு. இதிலிருந்துதான் விஜயகாந்தே விஸ்வரூபமெடுத்தார்.
மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம்தோறும் செல்வது, நற்பணிகள் செய்வது, இயக்கத் தொண்டர்களை உற்சாகப்படுத்துவது என்று கொள்கை பிரித்திருக்கிறார்கள். நேற்றைய விசிட் சேலம். சும்மாவே சேலம் மக்கள் சினிமா ப்ரியர்கள். விஜய் வந்தால்...? தடியடி நடத்திதான் அவர்களை கலைக்க வேண்டியிருந்தது. இந்த களேபரத்துக்கு நடுவில் பல லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் விஜய்.
சேலத்தில் சில சீட்களாவது பிடிப்பார்கள் என்றுதான் தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.