மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நமிதா கோபம் - சோனா நடிகையே இல்லை.

நமிதா இப்போது தமிழில் நடிப்பதில்லை. என்றாலும் அவரை வைத்து படங்களில் வசனங்கள் எழுதுகிறார்கள், காட்சிகள் அமைக்கிறார்கள். கோ படத்தில் கவர்ச்சியாக உடையணிந்து இரட்டை அர்த்த வசனம் பேசி நமிதாவைப் போல் மச்சான்ஸ் என்று வசனம் பேசி நடித்தார் சோனா. இந்தக் காட்சி அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. கவர்ச்சி நடிகை என்றாலும் இதுபோன்ற அருவருப்பான காட்சிகளில் எதுவும் நமிதா நடித்ததில்லை.

இது குறித்து நமிதாவிடம் கேட்ட போது பதில் பேசாமல் ஒதுங்கிக் கொண்டார். அவரே இப்போது இந்த‌க் காட்சி குறித்தும் சோனா குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை முழுவதும் நமிதாவின் கோபம் கொப்பளிக்கிறது.

கோ படத்தில் சோனா நடித்தது ஒரு துக்கடா காட்சி. ஆபாச உடையில் அதைவிட ஆபாச உடல் மொழியுடன் இரட்டை அர்த்த வசனம் பேசி நடிப்பின் அடிப்படையையே கொச்சைப்படுத்தியிருந்தார். இந்தக் காட்சியின் ஆபாசத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்துக்கே முழு பங்கு என்பதையும் தெ‌ரிவிக்க வேண்டும்.

இந்தக் காட்சியில் நடித்ததை ஏதோ பெ‌ரிய விஷயம் போல் சோனா மீடியாக்கில் தெ‌ரிவித்து வந்தார். உச்சகட்டமாக, இந்தக் காட்சிக்காக நமிதா என்னை பாராட்டியிருக்க வேண்டும், நான் எஸ்எம்எஸ் அனுப்பியும் அவர் பதில் தெ‌ரிவிக்கவில்லை என்று பேட்டிளித்தார். இதுதான் நமிதாவை கோபப்படுத்தியது.

சோனா நடிகையே இல்லை, அவருக்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கொந்தளித்துப் போய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நியாயமாக கே.வி.ஆனந்த்தான் நமிதாவின் கோபத்துக்கு பதிலளிக்க வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.