நடிக்கிற, நடிக்காத அத்தனை பேருடனும் கிசுகிசுக்கப்படுகிற ராசி லட்சுமிராய்க்கு. கேப்டன் டோனியுடன் இவரை தொடர்புப்படுத்தி வந்த செய்திகளை தொகுத்தால் கன்னித்தீவு தோற்கும்.
இப்போது லாரன்சுடன் லட்சுமிராயை இணைத்திருக்கிறார்கள். முதலில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் இணைந்து நடித்தார்கள், பிறகு பெண் சிங்கத்தில் ஒரு பாடலுக்கு இணைந்து ஆடினார்கள், இப்போது காஞ்சனாவில் மீண்டும் ஜோடி போட்டிருக்கிறார்கள். இது வேறொன்றுமில்லை மூன்றெழுத்து அதுவேதான் என்று கற்பூரம் அணைக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் ராய் என்ன சொல்கிறார்?
யார் இப்படியெல்லாம் புளுகிறாங்கன்னு தெரியலையே. நாங்க சேர்ந்து நடிச்சதெல்லாம் எதேச்சையாக நடந்தது. காஞ்சனாவில் முதலில் அனுஷ்காதான் நடிப்பதாகதான் இருந்தது. அவர் இல்லைங்கிறப் பிறகுதான் என்கிட்ட வந்தாங்க. இதை வச்செல்லாம் முடிச்சுப்போட முடியுமா என்று முணுமுணுக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.