
காஞ்சனா படத்தின் வெற்றி லாரன்ஸை ஸ்டாராக்கியிருக்கிறது. நடிப்பு, இயக்கம் என அவரது திட்டங்கள் மெதுவாக ஆனால் ஸ்டெடியாக நடந்து வருகிறது.
ஷங்கர் இயக்கும் நண்பனில் ஏற்கனவே நட்சத்திரப் பட்டாளம் அதிகம். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, அனுயா என்று அடுக்கித் தள்ளியிருக்கிறார். இதில் லேட்டஸ்டாக லாரன்சும் இணைந்து கொண்டிருப்பதாக கேள்வி. முக்கியமான வேடம் ஒன்றில் ஷங்கர் அவரை நடிக்க கேட்க, அவரும் உடனே ஓகே சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாரன்ஸ் இருந்தால் நண்பனின் தெலுங்குப் பதிப்பான 3 ராஸ்கல்ஸின் நட்சத்திர அந்தஸ்து ஒருபடி அதிகமாகும் வாய்ப்புள்ளது.
Telungula 3 raskales'a
ReplyDelete