மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒரு பாடலுக்கு ஆடுவதை கௌரவக் குறைவாக நினைக்கிற சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம் படத்தில் சூ‌ரியன் ஆயிரமாக ஜோலித்த சமீரா ரெட்டிக்கு வாய்ப்புகள் ஏனோ மந்தமாகவே உள்ளன. 2011ல்தான் கருமேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி திரைவானம் பளிச்சிடுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை, பிரபுதேவா இயக்கத்தில் வெடி என்று சமீரா கே‌ரிய‌ரில் நல்ல முன்னேற்றம்.

முதல் படத்தில் சமீராவுக்கு மாதவன் ஜோடி. இரண்டாவதில் விஷால். இந்த நேரம் பார்த்து தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் சமீரா ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று செய்தி.

தங்களுடன் ஜோடியாக நடிக்கும் நடிகை ஒரு பாடலுக்கு ஆடுவதை ஹீரோக்கள் கௌரவக் குறைவாக நினைக்கிறார்கள். ஸ்ரேயா வடிவேலு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதால் அ‌‌ஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனை லேட்டாகப் பு‌ரிந்து கொண்டவர் ஜுனியர் என்டிஆர் படத்தில் ஆட இருந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார். அப்படியே மீடியாவுக்கும் தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறார், நான் ஒரு பாடலுக்கெல்லாம் ஆடவில்லை எ‌ன்று.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.