5. தெய்வத்திருமகள்
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் இன்னமும் டாப் 5ல் தெய்வத்திருமகள் உள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.2 லட்சங்கள். இதுவரை இப்படம் சென்னையில் 7.18 கோடிகளை வசூல் செய்துள்ளது.
4. ரௌத்திரம்
ஜீவாவின் இப்படம் சுமாரான வசூலையே பெற்றிருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 5.3 லட்சங்கள். இதுவரை 2.67 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.
3. யுவன் யுவதி
யுவன் யுவதியின் சென்ற வார இறுதி வசூல் 8.2 லட்சங்கள். இதுவரை 97 லட்சங்களை வசூலித்துள்ளது. பரத்துக்கு இது மோசமான வசூல் என்றே சொல்ல வேண்டும்.
2. காஞ்சனா
இந்த வருடத்தின் சர்ப்ரைஸ் ஹிட்டான இந்தப் படம் சென்ற வார இறுதியில் 9.7 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 4.86 கோடிகள்.
1. மங்காத்தா
சென்ற புதன்கிழமை வெளியான இப்படம் முதல் ஐந்து தினங்களில் அதாவது புதன் முதல் ஞாயிறு வரை 1.8 கோடியை வசூலித்துள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஓபனிங் மங்காத்தா என்ற பெருமையையும் இப்படம் தட்டிச் செல்கிறது. படத்தின் வசூல் சென்னையில் மட்டும் எட்டு கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.