நாளை முதல் புதிய படங்கள் எதையும் தொடங்குவதில்லை என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பால் திரையுலகில் பதற்றம் நிலவுகிறது.
திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பளம் நிர்ணயிக்கப்படும். தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டும்முன் பல படப்பிடிப்புகள் தொழிலாளர்களின் ஒத்துழையாமையால் நிறுத்தப்பட்டன. மேலும், இதுதான் சம்பளம் என பெரும் தொழிலாளர்கள் தரப்பில் சம்பளப் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக தயாரிப்பார்கள் அவசரமாக ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி நாளை முதல் எந்தப் புதிய படமும் தொடங்கப் போவதில்லை என்றும், கர்நாடக மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட சம்பள உயர்வையே இங்கும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் திரைப்பட சங்கங்களின் மத்தியில் குழப்பமும், கோபமும் நிலவுகிறது. வேலை நிறுத்தம் நடந்துவிடுமோ என்ற பயம் அனைத்துத் தரப்பினரிடமும் காணப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.