மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அனுஷ்கா கமல் படத்திலிருந்து விலகல்.

விஸ்வரூபம் படத்தின் கதாநாயகி யார்? க்ரோர்பதியில் இந்த‌க் கேள்வியை வைத்தால் போட்டியாளர் கமலாக இருந்தாலும் டமால்தான். கதாநாயகி யார் என்பதில் தடுமாற்றம் தலைவி‌ரித்தாடுகிறது.

விஸ்வரூப குழப்பத்தை முதலிலிருந்து சொன்னால் ஒரு கட்டுரை அளவுக்கு ஆகிவிடும். அதனால் அனுஷ்காவிலிருந்து தொடங்கலாம். கமல் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரும் விலகிவிட்டாராம்.

இந்த விலகலுக்கு காரணம் நாகார்ஜுனா என்கிறார்கள். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் அனுஷ்கா நடித்து வருகிறார். அவரது கட்டுப்பாட்டில்தான் அனுஷ்கா இருப்பதாக கூறப்படுகிறது. அவ‌ரின் வற்புறுத்தல் காரணமாகவே கமல் படத்திலிருந்து அனுஷ்கா விலகியதாக கிசுகிசுக்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.