மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சேரன், அமீருக்கு எதிராக உதவி இயக்குனர்கள் அணிதிரளயிருக்கிறார்கள்.

திரைப்பட சங்கங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் மிகக் குறைந்த கட்டணம் உதவி இயக்குனர்களுக்குதான். ஐந்தாயிரம் செலுத்தினால் இயக்குனர்கள் சங்கத்தில் சேரலாம்.

உதவி இயக்குனர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து கணக்கிட்டால் இந்த ஐந்தாயிரம் மிக அதிகம்தான், சந்தேகமில்லை. நிலைமை இப்படியிருக்க புதிதாக பதவியேற்ற நிர்வாகிகள் அனுமதி கட்டணத்தை 25 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறார்கள். இது உதவி இயக்குனர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கட்டணம். ஐந்தாயிரம் கொடுத்து தற்காலிக அட்டை வாங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெ‌ரிவித்து சேரன், அமீருக்கு எதிராக அணிதிரளயிருக்கிறார்கள்.

புரட்சி பேசும் சேரன் போன்றவர்கள் வறுமையில் வாடும் உதவி இயக்குனர்களை கட்டணம் என்ற பெய‌‌ரில் கசக்கிப் பிழிய முன் வந்திருப்பது கண்டனத்துக்கு‌‌ரியது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.