![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNc7qUTAalHF4BQncnV8-vCV8NpYK5XjSupUd9BoBMb6_PIuuRKLhqfsRXRSCIlRys-LnDjcB_9E3rSaqLqr-z99qfvC3-wHW7Y0OIzIwQhjT6p_HpezmO7GzaVLYHCQj6-qW8Z5kbtwA/s320/Priyanka+Chopra+to+pair+with+Vijay+in+Murugadoss+movie.jpg)
7ஆம் அறிவுக்குப் பிறகு விஜய் படத்தை முருகதாஸ் இயக்குகிறார். இதனை முருகதாஸ் உறுதி செய்துள்ள நிலையில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ரா முதல் அனுஷ்கா வரை பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் முருகதாஸ் இதுவரை ஹீரோயினை முடிவு செய்யவில்லை என்பதுதான் உண்மை. முருகதாஸின் பேவரைட் இசையமைப்பாளர் ஹரிஸே இந்தப் படத்துக்கும் இசையமைப்பார் என்று தெரிகிறது.
படத்துக்கு ஒளிப்பதிவு அனேகமாக சந்தோஷ் சிவன் தேர்வு செய்யப்படலாம் என்கிறார்கள். 7 ஆம் அறிவு படத்துக்கு ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.