ராஜபாட்டை விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்களில் பலர் பயந்து போயினர். காரணம் விக்ரமின் கெட்டப். சம்பல் கொள்ளைக்காரனாக, கரிபியன் ஜாக் ஸ்பேரோவாக, மொட்டை பாஸாக பல்வேறு கெட்டப்புகளில் விக்ரம் படத்தை அச்சிட்டிருந்தனர். விக்ரமின் இந்த அமெச்சூர் கெட்டப்புகள் ராஜபாட்டை மீதிருந்த மரியாதையையே சற்று கீழறக்கிவிட்டது. சுசீந்திரனா இப்படி மாறிப் போனார் என்று கேட்காதவர்கள் குறைவு.
ஆனால் இந்த கெட்டப்புகள் ஒரேயொரு பாடல் காட்சிக்குதானாம். மற்றபடி ஒரேயொரு கெட்டப்பில்தான் விக்ரம் வருகிறார். நில மோசடியை பின்புலமாக வைத்து இந்த கதையை சுசீந்திரன் எழுதியிருக்கிறாராம்.
யுவன் இசையமைத்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.