மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விபரீத ஆசையை அள்ளி தெளித்திருக்கிறார் சமீரா ரெட்டி.

ஒரு பாடலுக்கு ஒரு நடிகை ஆட முன்வந்தால் அவரது மார்க்கெட் டல்லடிக்கிறது என்று அர்த்தம். ஒரு பாடலுக்கு வடிவேலுடன் ஆடியதால் அஜீத் பட வாய்ப்பை இழந்தவர் ஸ்ரேயா.

இந்த விஷயங்கள் தெரிந்திருந்தும் ஒரு பாடலுக்கு ஆட ஆசையாக இருக்கிறது என்று அள்ளி தெளித்திருக்கிறார் சமீரா ரெட்டி. ஏன் இந்த விபரீத ஆசையாம்?

சில படங்களின் வெற்றிக்கு குத்துப் பாடல் காரணமாக அமைகிறதாம். இதனை தபாங் படத்தில் கண்டு கொண்டாராம் சமீரா. அதனால் நல்ல குத்துப் பாடல் என்றால் ஆடத் தயார் என்கிறார். நடிக்க வந்த பிறகு வேட்டை, வெடி என்று இப்போதுதான் சமீராவின் மார்க்கெட் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. நடக்கிற கூத்தைப் பார்த்தால் இவரே கேட்டை இழுத்து மூடுவார் போலிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.