5. மங்காத்தா
மங்காத்தா இந்த வருடத்தின் மெகா ஹிட்டாக பாக்ஸ் ஆஃபிஸில் தன்னை பதிவு செய்துள்ளது. எட்டே கால் கோடியை இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.69 லட்சங்கள்.
4. வேலூர் மாவட்டம்
நந்தா நடித்திருக்கும் வேலூர் மாவட்டம் முதல் பத்து தினங்களில் 43.59 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 5.17 லட்சங்களை மட்டுமே இப்படத்தால் வசூலிக்க முடிந்துள்ளது.
3. முரண்
சேரன் தயாரித்து நடித்திருக்கும் முரண், வித்தியாசமான கதைக் களத்தை விரும்பும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் 96 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் எட்டு லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2. வெடி
சன் பிக்சர்ஸின் திகட்டும் விளம்பரங்களால் படம் இரண்டாவது வாரத்தையும் வெற்றிகரமாக தாக்குப் பிடித்துதுள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் வெடியின் வசூல் 3 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 22.2 லட்சங்கள்.
1. எங்கேயும் எப்போதும்
தொடர்ந்து முதலிடத்தில் எங்கேயும் எப்போதும். அறிமுக இயக்குனர் சரவணனின் இப்படம் சென்ற வார இறுதியில் 26 லட்சங்களை வசூலித்துள்ளது. நான்கு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 4.09 கோடிகள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.