இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
குழந்தைகளை அவர்களின் தனித் திறமையை கண்டறிந்து அவர்களின் போக்கில் வளரவிட வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கும் படம் டோனி. இந்தப் படத்தில் வரும் சிறுவனின் ரோல் மாடல் டோனி. அதனால் படத்தின் பெயரை டோனி என்று வைத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் இரு மொழி கலைஞர்களும் நடித்து வருகின்றனர். ஒரு பாடல் காட்சியில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். டோனியை மையப்படுத்திய கதை என்பதால் ஒரு காட்சியில் கிரிக்கெட் வீரராகவே அவர் நடிக்கிறார். இதற்கான சம்மதத்தையும் அவர் பிரகாஷ்ராஜிடம் தெரிவித்துள்ளார்.
nalla visayam.. nadikkattumee.. vaalththukkal
ReplyDelete