![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzWUU8jLw3ClSBH-L70dt-WnIqiwJPvDjAtb412qUzemMHObC3Ruzdwe_qILt_MBlXmpODDei_W69gfRcJR4OwUG2GQiSIqRQQcvNrrtxAFjmMR8D21OLzR0LDgxVcsuFjH0wycIXXoTw/s320/Rajinikanth+in+add+movie+about+healthy+food.jpg)
இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் மத்தியில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக விளம்பர படங்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விளம்பர படத்தின் மூலம் மக்களிடம் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபலமான நடிகர்கள் ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் ரஜினிகாந்தும், அமீர்கானும் கையெழுத்திட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து இவர்கள் நடிக்க உள்ள ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பர பேனர்களை நாடு முழுவதும் வைக்கப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள் பிரசாரக்கூட்டங்களிலும் இருவரும் பேச உள்ளனர்.
போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படத்தில் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடித்தது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.