வெங்கட்பிரபு அடுத்து சூர்யாவை இயக்குகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. படத்தை தயாரிப்பவர் ஞானவேல்ராஜா.
மங்காத்தாவுக்குப் பிறகு வெங்கட்பிரபு யாரை வைத்து படம் இயக்குவார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. காரணம் சோனா தனக்கு படம் இயக்கித்தர வெங்கட்பிரபுவுக்கு அட்வான்ஸ் தந்திருந்தார். எஸ்.பி.பி.சரண் விவகாரத்தில் இந்த ஒப்பந்தம் உறி மாதிரி சிதறிப் போக, வாங்கிய அட்வானஸில் ஒரு பகுதியை வெங்கட்பிரபு திருப்பித் தந்தார். மீதியை நீங்கதான் வாங்கித் தரணும் என்று ஞானவேல்ராஜாவிடம் கேட்டிருக்கிறாராம் சோனா. அவர்தானே வெங்கட்பிரபுக்கு சம்பளம் தரப் போகிறவர்.
இந்த அட்வான்ஸ் விவகாரத்தால் வெங்கட்பிரபுவின் அடுத்தப்பட ஹீரோ சூர்யா என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.