மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> முதலிடத்தில் மயக்கம் என்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. வித்தகன்
பார்த்திபனின் போலீஸ் ஸ்டோ‌ரி குறைவான ரசிகர்களையே சென்றடைந்திருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 1.3 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 46 லட்சங்கள்.

4. வேலாயுதம்
வேலாயுதம் சர்ரென்று நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.6 லட்சங்கள். இதுவரை இப்படம் சென்னையில் 7.69 கோடிகள் வசூலித்துள்ளது. இது தெய்வத்திருமகள் படத்தின் வசூலைவிட குறைவு.

3. 7 ஆம் அறிவு
முருகதாஸின் படம் சென்னையில் மட்டும் 8.85 கோடிகளை கடந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 11.6 லட்சங்கள்.

2. போராளி
சமுத்திரக்கனியின் படம் மோசமில்லாத ஓபனிங்கை பெற்றிருக்கிறது. இப்படம் முதல் நான்கு தினங்களில் 38 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. மயக்கம் என்ன
தொடர்ந்து அதே முதலிடத்தில் செல்வராகவனின் மயக்கம் என்ன. இப்படம் சென்ற வார இறுதியில் 68.4 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் பத்து நாள் வசூல் 2.73 கோடிகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.