மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒஸ்தி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. வேலாயுதம்
வேலாயுதம் இன்னும் தெய்வத்திருமகள் வசூலை எட்டவில்லை. சென்ற வார இறுதியில் 1.4 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 7.74 கோடிகளை வசூலித்துள்ளது.

4. 7ஆம் அறிவு
சென்னை பாக்ஸ் ஆஃபிஸைப் பொறுத்தவரை எந்திரன், தசாவதாரம் படஙகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது முருகதாஸின் படம். இதுவரை 9 கோடிகளை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 4 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3. மயக்கம் என்ன
ரசிகர்களை பெ‌ரிதாக‌க் கவராததால் செல்வராகவனின் படம் சட்டென்று தரை தட்டியிருக்கிறது. சென்ற வார இறுதியில் 22.7 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 3.69 கோடிகள்.

2. போராளி
நாடோடிக்கு கிடைத்த அளவு வரவேற்பு போராளிக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது வார இறுதியில் இப்படத்தால் 23.8 லட்சங்களை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 1.01 கோடி.

1. ஒஸ்தி
முதலிடத்தில் சிம்புவின் ஒஸ்தி. முதல் நான்கு தினங்களில் இப்படம் 1.33 கோடிகள் வஆலித்து 7 ஆம் அறிவு, வேலாயுதம் படங்களுக்கே அதிர்ச்சி அளித்திருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.