மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> K.V.ஆனந்த், கௌதம் ஒரே மேடையில்.

அதர்வா, அமலா பால் நடித்திருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 18 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கௌதம் வாசுதேவ மேனன், கே.வி.ஆனந்த் கலந்து கொள்கின்றனர்.

காதல் கதையான இப்படத்தை பெரும் பொருட்செலவில் எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் இதன் பாடல் காட்சிகள் வேகாஸில் படமாக்கப்பட்டது. அப்போது விளம்பரத்துக்காக படத்தின் ஒரு பாடலை மட்டும் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ‌ஜி.வி.பிரகாஷும் கலந்து கொண்டார்.

டிச.18 ஆம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் முறைப்படி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துகின்றனர். இதில் கௌதம், கே.வி.ஆனந்த் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.