மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சங்கீதாவின் புத்தாண்டு நிகழ்ச்சி விளக்கம்.

சுவிட்சர்லாந்தில் தமிழர் ஏற்பாடு செய்திருக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பது பற்றி நடிகை சங்கீதாவும், அவரது கணவர் கி‌ரிஷும் விளக்கம் அளித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு அன்று நடக்கும் நிகழ்ச்சியை கருணா ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் கலந்து கொள்ளும் சங்கீதா, கி‌ரிஷ், நடிகர் ‌ஜீவா ஆகியோர் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கோ‌ரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழர் நலன்தான் முக்கியம் என சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்தார் ‌ஜீவா.

அதேநேரம் சங்கீதாவும், கி‌ரிஷும் இந்த விழா பற்றி வேறொரு விளக்கம் அளித்துள்ளனர். சில மாதங்கள் முன்பு இலங்கையில் நடந்த விழாவுக்கு சென்ற கி‌ரிஷ் உள்ளிட்ட சிலர், அந்த விழா இலங்கை அரசின் ஆதரவில் நடப்பதால் எழுந்த எதிர்ப்பில், விழா நிகழ்ச்சியை புறக்கணித்து தமிழகம் திரும்பினர். இதற்காக பாராட்டு தெ‌ரிவித்து நடக்கும் நிகழ்ச்சியில்தான் நாங்கள் கலந்து கொள்ளவிருக்கிறோம். அழைப்பிதழிலும் அப்படிதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என சங்கீதாவும், கி‌ரிஷும் விளக்கமளித்துள்ளனர்.

அதேபோல் விழா நடத்தும் தமிழ் அமைப்பும், இது கருணா நடத்தும் நிகழ்ச்சி அல்ல என தெ‌ளிவுப்படுத்தியுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.