மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> செல்வராகவன் மாற்றிய காம்பினேஷன்.

ஜி.வி.பிரகாஷுடனான செல்வராகவனின் சகவாசமும் முடிவுக்கு வந்திருக்கிறது. இவ‌ரின் புதிய படத்துக்கு இசையமைக்கப் போகிறவர் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ்.

யுவனுடனான பி‌ரிவுக்குப் பிறகு செல்வராகவனுக்கு செட்டானவர் ‌ஜி.வி.பிரகாஷ். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இதில் மயக்கம் என்ன பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனாலும் தனது புதிய படமான இரண்டாம் உலகத்துக்காக காம்பினேஷனை மாற்றியிருக்கிறார். புது காம்பினேஷன் ஹாரிஸ் ஜெயரா‌ஜ். இந்தத் தகவலை செல்வராகவனே தெ‌ரிவித்துள்ளார்.

இது எத்தனை படங்களுக்கோ?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.