
இரண்டு வருடத்துக்கு ஒரு படம் நடித்தாலும் தோல்விதான், ஆறு மாசத்தில் படத்தை தயார் செய்தாலும் தோல்விதான். முன்னே போனால் முட்டுவேன் பின்னே வந்தால் உதைப்பேன் என்று ஒருதினுசாகதான் இருக்குது விக்ரமின் ராசி.
பீமா, ராவணன் படங்களுக்கு ஒரு வருடத்துக்கு மேல் உழைப்பை கொடுத்தார் விக்ரம். இரண்டும் ப்ளாப். தெய்வத்திருமகள் பெயரை சம்பாதித்து தந்தாலும் பொருளை சம்பாதிக்கவில்லை. ஐ யம் சேமின் அப்பட்ட காப்பி என்ற அவப்பெயர் வேறு.
சரி, குறைவான நாட்களில் தயாரான ராஜபாட்டை பெயர் வாங்கித் தரவிட்டாலும் கலெக்சனில் தப்பிக்கும் என்று பார்த்தால் அதுவும் பணால். தப்பித்தால் போதும் என்று ஓடுகிறார்கள் ரசிகர்கள். படத்தில் வரும் அக்கா என்ற வில்லி அசப்பில் முதல்வர் போலிருப்பதால் அதிருப்தியில் முஷ்டி முறுக்குகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
தோல்வியை தாங்கிக்கலாம் இந்த அதிருப்தியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் சீயான்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.