முதலில் ஒரு பிளாஷ்பேக். மொழி படம் பார்த்த ரஜினி பிருத்விராஜை பாராட்டுவதற்காக ஃபோனில் தொடர்பு கொண்டாராம். ஒருமுறையல்ல 22 தடவை. ஏதோ வேலையில் பிஸியாக இருந்த பிருத்விராஜ் 22வது முறைதான் ஃபோனை அட்டெண்ட் செய்தாராம். இதனை ஒரு விவாதத்தின் போது குறிப்பிட்ட பிருத்விராஜ், ரஜினி என்னை ஃபோனில் அழைத்துப் பாராட்டினார், ஆனால் இங்குள்ள சூப்பர் ஸ்டார்கள் இதுவரை ஒருவார்த்தை என்னுடைய நடிப்பை பாராட்டியதில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு ஒருவர் சரியான பதில் ஒன்றை தந்தார். அது இறுதியில். இப்போது நமது விஷயத்துக்கு வருவோம்.
கோச்சடையான் வேலைகள் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கின்றன. இதில் பிருத்விராஜும் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று கூறுகிறது. இந்தப் படத்தில் ரஜினியின் சகோதரியாக வரும் சினேகாவுக்கு ஜோடியாக பிருத்விராஜ் நடிப்பார் என அந்தத் தகவல் மேலும் கூறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கான இசைப்பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டார் என்பது முக்கியமானது.
சரி, இப்போது அந்த பதிலுக்கு வருவோம். அவர் சொன்னது இதுதான். மோகன்லாலும், மம்முட்டியும் பாராட்ட ஃபோன் செய்திருப்பார்கள். ரஜினியோட 21 போன் கால்ஸை அட்டெண்ட் பண்ணாத மாதிரி மோகன்லால், மம்முட்டி ஃபோனையும் பிருத்விராஜ் அட்டெண்ட் பண்ணியிருக்க மாட்டார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.