இளையராஜாவின் என்றென்றும் ராஜா இசை நிகழ்ச்சி விஐபி நட்சத்திரங்கள் இல்லாமலே சிறப்பாக நடந்தது. விஐபி-கள் யாரும் வராததால் சிறப்பாக நடந்தது என்றும் சொல்லலாம். இல்லையென்றால் இசைக்கு நடுவில் விசலடித்தோ நோகடித்திருப்பார்கள்.
இளையராஜாவால் போணியான இயக்குனர்கள், நடிகர்கள் தமிழ் சினிமாவில் தாராளம் உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு விவேக், தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி என்று சொற்ப பேரே வந்திருந்தனர். ராஜாவின் ஆன்மிகத்தையும், இசையையும் மேடையில் புகழும் ஸ்டார் நடிகர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி ஆப்சென்ட்.
இந்த நிகழ்ச்சியின் மேடைக்குப் பின்னால் உள்ள சிறப்பம்சம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும் இந்நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பப்பட்டதாம். முழு நிகழ்ச்சியையும் அவர் ரசித்து பார்த்திருக்கிறார். விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.