
மணிரத்னம் கார்த்திக்கின் மகன் கௌதமை வைத்து இயக்கும் பூக்ஙகடை படத்தில் சோனம் கபூர் நடிக்கக் கூடும் என்றொரு செய்தி கசிந்துள்ளது.
இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்று குரோர்பதி போட்டியே வைக்கலாம். ஐம்பது கோடி பரிசுத் தொகை அறிவித்தாலும் யாரும் ஜெயிக்க மாட்டார்கள். அந்தளவு குழப்பம்.
அக் ஷரா தொடங்கி ராதாவின் இளைய மகள் துளசிவரை பல பெயர்கள் அடிபட்டன. இப்போது இந்தி நடிகை சோனம் கபூரின் பெயர். இவர் கௌதமின் அக்கா போலிருப்பாரே.. எப்படி மணிரத்னம் நடிக்க வைக்கப் போகிறார் என்றொரு கமெண்டும் இன்டஸ்ட்ரியில் உலவுகிறது.