மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வட சென்னை மார்ச்சில்.

வெற்றிமாறனின் அடுத்தப் படம் வட சென்னை என்பதை அப்படத்தை தயா‌ரிக்கும் தயாநிதி அழகி‌ரி உறுதி செய்துள்ளார்.

வட சென்னையில் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் தெலுங்கு நடிகர் ரானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ரானாவைப் போலவே ஆ‌ண்ட்‌ரியாவும் முக்கியமான வேடம் ஒன்றிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேல்ரா‌ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பித்துவிட்டதாகவும் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தயாநிதி அழகி‌ரி தெ‌ரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.