மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அமலா பாலின் நட்சத்திர பேட்டி - இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா?

மைனாவுக்குப் பிறகு சட்டென்று மாறியது தமிழ் திரையுலகின் வானிலை. தமன்னா என்று உச்ச‌ரித்த உதடுகள் அமலா என்றன. அமலா இல்லையேல் கால்ஷீட் இல்லை என்கிறார்களாம் ஹீரோக்கள். தமிழில் அடிக்கும் இந்த சூறாவளி இப்போது நகர்ந்து நாயுடுகளின் தேசத்தில் மையம் கொண்டிருக்கிறது. த்‌ரிஷா, தமன்னாக்களை முந்திக் கொண்டு ஜம்போ ஜெட் ஸ்பீடில் செல்லும் அமலா பாலின் மினி பேட்டி உங்களுக்காக.

முதல்ல ஒரு சம்பிரதாயமான கேள்வி. எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?

எனக்கு சொந்த ஊர் கேரளா. படிக்கிறப்பவே மாடலிங்கில் ஆசை இருந்திச்சி. நடிக்கிற ஆசையை வீட்ல சொன்னப்போ முதல்ல ஒத்துக்கலை. எங்க பேமிலிக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால சினிமாவில் நடிக்கிறது பத்தி சொன்னதும் வீட்ல பயந்துட்டாங்க. இது ச‌ரியா வராதுன்னு அம்மா சொல்லிட்டாங்க.

அப்புறம் எப்படி சம்மதிக்க வச்சீங்க?

சிம்பிள். நாலு நாள் ச‌ரியா சாப்பிடாம சோகமா தி‌ரிஞ்சேன். அதைப் பார்த்துட்டு அப்பாதான் அம்மாவை கன்வின்ஸ் செய்து எனக்கு நடிக்க பர்மிஷன் வாங்கித் தந்தார்.

உங்க முதல் படமே தமிழ்தானா?

இல்லை. மலையாளத்தில் இரண்டு படங்கள் நடிச்ச பிறகுதான் தமிழுக்கு வந்தேன்.

மைனா உங்களுக்கு இப்படியொரு பெயர் வாங்கித் தரும்னு நினைச்சீங்களா?

என்னோட நடிப்பு பாராட்டப்படும்னு தொரியும். ஆனா இப்படியொரு சக்சஸ் எதிர்பார்க்கலை. என்னுடைய கே‌ரிய‌ரில் மைனா மிக முக்கியமான படம்.

இப்போ என்னென் படங்கள் நடிச்சிட்டிருக்கீங்க?

அதர்வா ஜோடியா முப்பொழுதும் உன் கற்பனைகள். இது தவிர சித்தார்த் ஜோடியா, காதலில் சொதப்புவது எப்படி. இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகுது.

தெலுங்குக்குப் போன பிறகு நீங்க தமிழ்ப் படங்களுக்கு ச‌ரியாக கால்ஷீட் கொடுக்காமல சொதப்புவதாக புகார் இருக்கே?

உண்மையில் நான் கால்ஷீட் சொதப்புறது கிடையாது. இது என்னோட டைரக்டர்ஸுக்கு தெ‌ரியும். மூணு படங்களில் நடிக்கிறபோது சில வேளை ஒரு படத்துக்கு ஒரு நாள் அதிகமாக கால்ஷீட் தர வேண்டியிருக்கும். அந்த மாதி‌ரி சந்தர்ப்பத்தில் மத்தப் பட இயக்குனர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்பார். இது டைரக்டர்ஸுக்காக பண்றதே தவிர எனக்காக பண்ணிக்கிறதில்லை.

வேட்டை எப்படி வந்திருக்கு?

ரொம்ப நல்லா வந்திருக்கு. லிங்குசாமி சார் கடுமையா உழைச்சிருக்கார். நாங்களும்தான். வேட்டை ஷுட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்ததுன்னு சொல்லலாம்.

தெய்வத்திருமகளில் நடிச்சிருந்தாலும் நீங்க விக்ரமின் ஜோடி கிடையாது. அதுல வருத்தம் இருக்கா?

அந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியே கிடையாதே. பிறகு எப்படி வருத்தம் வரும். என்னுடைய கேரக்டர் எல்லோருக்கும் பிச்சிருந்தது. நல்லா நடிச்சிருந்ததா சொன்னாங்க. அது எனக்குப் போதும்.

விக்ரமின் ராஜபாட்டையிலும் நீங்க நடிக்கிறதா முதலில் செய்தி வந்ததே... என்னாச்சு?

ராஜபாட்டையில் நடிக்க என்னிடம் கேட்கவே இல்லை. பிறகு எப்படி அந்த மாதி‌ரி செய்தி வந்ததன்னு தெ‌ரியலை. ஆனா விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிற படத்தில் நடிக்கிறதுக்கு பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.

தெலுங்கில் கவனம் செலுத்துறதால தமிழ்ப் பக்கம் நீங்க அதிகம் வர மாட்டீங்கன்னு சொல்லப்படுதே?

விக்ரம் புராஜெக்ட் தவிர வேறு இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிகிட்டிருக்கோம். இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா?Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.