
அனன்யாவை அவருக்கு நெருக்கமான தோழிகள் தக்காளி என்றுதான் அழைக்கிறார்கள். தக்காளிப் போலவே தகதகக்கும் அழகு. கூடவே கொஞ்சம் சுட்டி. நாடோடிகளில் வரும் கதாபாத்திரத்தைப் போலவே நேரிலும் துறுதுறுவென இருக்கும் இவர் இப்போது நான்கு மொழிகளில் பிஸி. அவருடனான நேர்காணலிலிருந்து.
தமிழுக்கு ஏன் அடிக்கடி லீவ் விடறீங்க?
நாடோடிகள் முடித்த பிறகு கொஞ்சம் இடைவெளி விழுந்தது உண்மைதான். நாடோடிகள் மாதிரியே கதை சொன்னால் எப்படி நடிக்கிறது? அதுதான் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போதுதான் சீடன் வாய்ப்பு வந்தது. மலையாளத்தில் நந்தனம் என்ற பெயரில் வெளியாகி விருதுகள் குவிச்சப் படம். அந்த கேரக்டருக்காகவே நடிச்சேன்.
ஆனா இந்தப் படங்களில் கிடைக்காத பெயரை எங்கேயும் எப்போதும் தந்திடுச்சி இல்லையா?
அதுவொரு அருமையான படம். அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வருது. தமிழில் மட்டும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கேன். ஒரு படத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடிக்கிறார். இன்னொரு படம் ப்ரியதர்ஷனின் அசிஸ்டெண்ட் அஜீத் மேனன் இயக்கும் படம்.
கன்னடத்திலயும் நடிக்கிறீங்க போலிருக்கிறதே?
நல்ல கதையும் கேரக்டரும் இருந்தால் நான் மொழி, ஹீரோ பார்க்க மாட்டேன். கன்னடத்தில் நான் கமிட்டாகியிருக்கிறது நல்ல கதை, எனக்கு அருமையான கேரக்டர். ஹீரோவும், இயக்குனரும் புதுமுகங்கள்தான்.
சமீபத்தில் விஜய்யை சந்தித்தீர்களே. என்ன பேசினீர்கள்?
ஒரு ஃபங்ஷனில் சந்திச்சேன். விஜய் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்த்ததும் உற்சாகமாயிடுச்சி. என்னை அறிமுகப்படுத்திட்டு, நான் உங்க ரசிகை சார்னு சொன்னேன். ஆனா ஒரே வார்த்தையில் தேங்க்ஸ்னு சொல்லி முடிச்சிட்டார். ஏமாற்றமா இருந்திச்சி. இப்போ அவர்கூட ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.
மோகன்லாலிடம் நீங்க திட்டு வாங்கியது கேரளாவில் பரபரப்பா பேசப்பட்டதே?
ஆமா. ஒரு படத்தில் மிகப்பெரிய பள்ளத்தில் தொங்கிக் கிட்டிருக்கிற என்னை மோகன்லால் காப்பாத்துற மாதிரி காட்சி. நானே தொங்குறேன்னு சொன்னதுக்கு மோகன்லால் கடுமையா சத்தம் போட்டார். ஆனாலும் நான்தான் அடம் பிடிச்சு அந்த ரிஸ்க்கான காட்சியில் நடிச்சு மலையாள விஜயசாந்தினு அவர்கிட்டயே பாராட்டு வாங்கினேன்.
எங்கேயும் எப்போதும் படத்தில் உங்களுடன் நடித்த அஞ்சலியுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறீர்களாமே?
ஆமா. அது மலையாளப் படம். திலீப் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் படப்பிடிப்பு தொடங்கலை.
பெரிய ஹீரோக்களுடன் நடிக்கலைங்கிற வருத்தம் இருக்கிறதா?
நான் முன்பு சொன்ன மாதிரி பெரிய ஹீரோன்னு எல்லாம் நான் பார்க்கிறதில்லை. கதையும், கேரக்டரும் நல்லாயிருக்கணும். நாடோடிகளில் பெரிய ஹீரோவா நடிச்சார்? படம் நல்ல பெயரை வாங்கியதே. மோகன்லால் கூட இரண்டு படங்களில் தொடந்து நடிச்சேன். அவர் பெரிய நடிகர்தானே.
உங்க ஹாபி?
பாட்டு கேட்கிறது. அதுவும் இளையராஜா பாட்டுன்னா அப்படியே உருகிடுவேன். இசையில் அவர்தான் என் இஷ்டம். அவர் பாட்டு கேட்டுதான் தூங்குறேன்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.