ஆஸ்கார் விருதுகளின் அயல்நாட்டுப் படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்காக 9 அயல்நாட்டு திரைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதில் ஈரானின் புகழ்பெற்ற இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதியின் "எ செபரேஷன்" என்ற திரைப்படம் உள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த வாரம் கோல்டன் குளோப் விருது பெற்றது.
விமர்சகர்களால் பெரிதும் பாரட்டப்பட்ட இந்தப் படம் இந்த முறை ஆஸ்கார் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மானிய திரைப்பட இயக்குனரான விம் வெண்டர்ஸின் "பினா" என்ற திரைப்படமும் சிறந்த அயல்நாட்டுப் பட விருதுப் பரிசீலனனையில் உள்ளது. உலகின் தலை சிறந்த நடனக் கலை இயக்குனரான பினா பாஷ் என்பவரைப் பற்றிய இந்தத் திரைப்படம் முப்பரிமாணத் திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் சிறந்த ஆவண ஃபீச்சர் படப் பிரிவிற்கும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர பெல்ஜியம் திரைப்படம் "புல்ஹெட்", கனடாவின் "மான்ஸ்யூர் லஷார்", டென்மார்க்கின் "சூப்பர் கிளாசிக்கோ", இஸ்ரேலின் "ஃபுட்னோட்", மொராகோ நாட்டுத் திரைப்படமான "ஓமர் கில்டு மீ", போலந்தின் "இன் டார்க்னெஸ்", தைவானின் "வாரியர்ஸ் ஆஃப் தி ரெய்ன்போ" ஆகிய படங்களும் போட்டியில் உள்ளன.
ஆஸ்கார் விருதுகள் பிப்ரவரி 26ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.