
பழசோ, புதுசோ... கதை நல்லாயிருந்தா நடிப்பேன் என்று புதுமுக நடிகர்களுக்கு முகவரி தந்தவர் அஞ்சலி. புது நடிகராக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் அஞ்சலியிடம் கால்ஷீட் வாங்கலாம். அதேநேரம் கொஞ்சம் முகம் தெரிந்த நடிகரான வினய்க்கு நோ சொல்லியிருக்கிறார்.
ஏனாம்?
டேம் 999 படத்தில் வினய் நடித்திருக்கிறார். இதனால் அவருக்கு எதிராகவும் சில போராட்டக்காரர்கள் ரெட் கார்ட் அஸ்திரத்தை வீசினார்கள். இந்த நேரத்தில்தான் அஞ்சலியின் கால்ஷீட்டை கேட்டிருக்கிறார்கள். வினய்யுடன் நடித்தால் வினை என்று அருகிலிருந்ஙதவர் போட்டுக் கொடுக்க, எதற்கு வம்பு என கதை கேட்காமலே நோ சொல்லியிருக்கிறார்.
உஷார் பார்ட்டிதான்.