மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நல்ல படங்களில் நடிக்கணும், நெ ஒன் பொசிஷனை எட்டிப் பிடிக்கணும் தீ‌க்சா சேத் கலகல பேட்டி

ராஜபாட்டையில் அறிமுகமான ‌தீ‌க்சா சேத்துக்கு நல்லவேளையாக அப்படம் வெளிவரும் முன்பே வேட்டை மன்னனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிம்பு ஜோடியாக நடித்துவரும் இவரைப் பற்றியும், இன்னொரு ஹீரோயினான ஹன்சிகா மோத்வானி குறித்தும் கோடம்பாக்கம் கிசுகிசு தி‌ரியை பற்ற வைத்திருக்கிறது. இருபதே வயது என்றாலும் வெளிப்படையாகப் பேசுவதில் அறுபதின் அனுபவம் தெ‌ரிகிறது ‌தீ‌க்சாவின் பேச்சில்.

வேட்டை மன்னனில் யார் ஹீரோயின். நீங்களா, ஹன்சிகா மோத்வானியா?

சிம்பு ரொம்ப வெளிப்படையாகப் பேசக்கூடியவர். என்னை அவர் ஒப்பந்தம் செய்யும் போதே, நீதான் ஹீரோயின் என்று சொன்னார். வேட்டை மன்னனில் நான்தான் ஹீரோயின். ஹன்சிகா மோத்வானியும் அதில் நடிக்கிறார். இதில் எந்த‌க் குழப்பமும் இல்லை.

ஹீரோ சிம்பு என்றதும் உங்களை குழப்பியிருப்பார்களே?

சிம்பு ரொம்ப சின்சியரான நடிகர். அவரது படங்களை நடிக்க வருவதற்கு முன்பே பார்த்திருக்கிறேன். அலட்டலாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, தொட்டி ஜெயாவில் அமைதியாக வந்து அசத்தியிருப்பார். அவரது வானம், ஒஸ்தி எல்லாம் பார்த்திருக்கிறேன். அவரால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும்.

தமிழ் சினிமா பிடிச்சிருக்கா?

நமது பிரதமரே தமிழ் சினிமா பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். இன்றைக்கு இந்தி சினிமா தமிழ் சினிமாவைப் பார்த்துதான் வளர்கிறது. தமிழ்ப் படங்கள்தான் இந்தியில் அதிகம் ‌ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் பிரபலமானால் இந்தி வாய்ப்பு எளிதாக கிடைக்கும். தமிழிலிருந்து இந்திக்கு செல்வது ரொம்ப ஈஸி.

ராஜபாட்டை உங்களுக்கு திருப்தியாக அமைந்ததா?

முதல் படம் மாஸ் படமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதுபோல் நல்ல கமர்ஷியல் படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தது மறக்க முடியாதது. விக்ரம் நடிப்பு பற்றியும் இன்டஸ்ட்‌ரி பற்றியும் நிறைய டிப்ஸ்கள் தந்தார்.

வேட்டை மன்னன்...?

ராஜபாட்டையிலிருந்து அப்படியே வித்தியாசமான கேரக்டர். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்ட். கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

ச‌ரி, உங்களுக்குப் பிக்காதது..?

எனக்கு இப்போதுதான் இருபது வயதாகிறது. என்னிடம் எப்போது கல்யாணம் என்று கேட்கிறவர்களை சுத்தமாகப் பிடிக்காது. அதற்கான நேரம் வரும்போது கல்யாணம் செய்துக் கொள்வேன்.

காதல்...?

ஷாருக்கான் மாதி‌ரி யாராவது கிடைத்தால் காதல் பற்றி யோசிக்கலாம்.

உங்க புத்தாண்டு சபதம் என்ன?

நல்ல படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்கணும், நெ ஒன் பொசிஷனை எட்டிப் பிடிக்கணும், அவ்வளவுதான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.