மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.

சன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெமினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கியுள்ளது சன் குழுமம்.

நேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India)என்பதாகும்.

லைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகியவற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி லைப் ஆகிய சானல்கள் முக்கியத்துவம் கொடுக்கவுள்ளன.

அதேசமயம் வழக்கமான சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் சன் டிவி RI சானல் மூலம் ஒளிபரப்பாகும். ஆனால் இது தமிழகத்தைத் தவிர பிற பகுதிகளில் மட்டும் தெரியும். அந்தந்த மாநிலங்களுக்கேற்ப நிகழ்ச்சிகளை மாற்றியமைத்து விளம்பரதாரர்களைக் கவர இந்த சானல்.
இதன் மூலம் பொழுதுபோக்கு, திரைப்படம், இசை, செய்தி, சிறார்கள், நகைச்சுவை, ஆக்ஷன், லைப்ஸ்டைல் என 8 பிரிவுகளில் சன் குழுமச் சானல்கள் ஒளிபரப்பாகின்றன.

தற்போது சன் குழுமத்தில், தமிழில் 12, தெலுங்கில் 9, கன்னடத்தில் 7, மலையாளத்தில் 4 என மொத்தம் 32 சானல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவை- சன் டிவி, சன் டிவி HD,கேடிவி, கேடிவி HD, சன் மியூசிக், சன் மியூசிக் HD, சன் நியூஸ்,சுட்டி டிவி, ஆதித்யா, சன் ஆக்ஷன், சன் லைப், சன் டிவி RI, சூர்யா டிவி, கிரண் டிவி, சூர்யா ஆக்ஷன், ஜெமினி டிவி, ஜெமினி டிவி HD, ஜெமினி மூவிஸ், ஜெமினி நியூஸ், ஜெமினி மியூசிக், ஜெமினி காமெடி, குஷி டிவி, ஜெமினி ஆக்ஷன், ஜெமினி லைப், உதயா டிவி, உதயா காமெடி, உதயா மியூசிக், உதயா மூவிஸ், உதயா நியூஸ், சிந்து டிவி, கொச்சு டிவி, சூரியன் டிவி.

கடந்த வாரம்தான் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் விளம்பரமே இல்லாமல், தொடர்ந்து சண்டைப் படங்களை ஒளிபரப்பும் புதிய சானல்கள் தொடங்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழில் மூன்றும், தெலுங்கில் ஒன்றுமாக நான்கு ஹை டெபினிஷன் HD சானல்களை சன் குழுமம் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு, சிபிஐ விசாரணைகள் என பல நெருக்குதல்கள் இருந்தாலும், அதற்கு மத்தியில் தனது பிசினஸ் எல்லைகளை விஸ்தரிப்பதில் சன் குழுமம் கவனமாகவே உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.