அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்று மீடியா போட்டுத்தாக்கியதால் பொங்கியெழுந்த அஞ்சலி, அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம். போட்டி நிறைந்த இந்த உலகில் அஞ்சலியின் பேட்டியெல்லாம் எம்மாத்திரம்?
எங்கேயும் எப்போதும் தெலுங்கில் தி ஜர்னி என்ற பெயரில் வெளியாகி பட்டையை கிளப்புகிறது. ஜெய், அஞ்சலி ஜோடியை ஆந்திரா ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. இதே காம்பினேஷனில் ஒரு படத்தை எடுக்க பலருக்கும் ஆசை. பல்க்காக சம்பளம் தருவதாக கூறிய ஒரு தயாரிப்பாளருக்கு படம் நடித்துத்தர ஜெய், அஞ்சலி இருவருமே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்டபடியானால் அஞ்சலியின் சபதம்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.