சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் செலவும் சூப்பராகதானே இருக்கும்? முகமூடிப் படத்தின் செலவு சூப்பர் டூப்பர் என்கிறார்கள் யூனிட்டில்.
மிஷ்கின் சொன்ன செலவுக் கணக்குக்கு பயந்துதான் முகமூடிப் படத்தை தயாரிக்க பலரும் ஆர்வம் காட்டாமலிருந்தனர். இறுதியில் யுடிவி முதல் காப்பி அடிப்படையில் படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டது. மிஷ்கின் சொல்லும் பணத்தை அவர்கள் தருவார்கள். அதற்குள் படத்தை முடித்துவிட வேண்டும். போட்ட பட்ஜெட்டைவிட செலவு எகிறினால் அது மிஷ்கின் பொறுப்பு.
பல படங்கள் இயக்கியிருந்தாலும் முகமூடி விஷயத்தில் மிஷ்கினின் கணிப்பு கவிழ்ந்துவிட்டது. அவர் நிதைததைவிட எகிறிவிட்டதாம் செலவு. இன்னும் பாதி படமே முடியாத நிலையில், கை காசைப் போட்டுதான் படத்தை முடிக்க முடியும் என்ற நிலை. புலம்பிக் கொண்டே ஆக் ஷன் கட் சொல்கிறாராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.