முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரும் 8ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட மாஸ் நடிகர்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. பாரதிராஜா நடிகர்களை பெயர் குறிப்பிடாமல் மொத்தமாக தாக்கிப் பேசியது நினைவிருக்கலாம். இப்போது வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.