மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மதுஷாலினி நட்சத்திர பேட்டி எல்லா கேரக்டர்ஸும் பண்ணக் கூடிய நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும்.

ஷாலினியின் ஹோம்லி லுக்கும், மதுவின் போதை கிக்குமாக மதுஷாலினி எப்போதுமே புத்துணர்ச்சியின் புகலிடம். அவன் இவனுக்குப் பிறகு ஆளையே காணோம் என்று பார்த்தால் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்திக்குப் போனதால் எந்த‌க் கனமும் இவரது தலைக்குள் ஏறாதது நல்ல விஷயம். தன்னைப் பற்றியும், தனது படங்கள் பற்றியும் மதுஷாலினியின் பேட்டியிலிருந்து.

முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்க?

எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லை. நானும் பொறுப்பா எலக்ட்ரானிக் என்‌ஜினிய‌ரிங் படிச்சேன். நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை. சினிமா பின்னணி இல்லாததால் அப்பா, அம்மா முதலில் அனுமதிக்கலை. பிறகு என்னுடைய ஆசைக்காக சம்மதிச்சாங்க. முதல் படம் தெலுங்கில். அப்புறம் பதினாறுங்கிற படத்தில் நடிச்சேன். கொஞ்சம் போராடித்தான் சினிமாவுக்கு வந்தேன்.

பாலா படத்தில் எப்படி வாய்ப்பு கிடைச்சது?

பாலா சார் படத்தில் நடிக்கிறது பெ‌ரிய சேலஞ்ங்கிற விஷயம் எனக்குத் தெ‌ரியும். நானாகதான் போய் அவர்கிட்ட வாய்ப்பு கேட்டேன்.

அவன் இவனுக்குப் பிறகு உங்களை தமிழில் காணலையே?

இரண்டு காரணங்கள். அவன் இவனுக்குப் பிறகு எனக்கு வந்ததெல்லாம் அதேமாதி‌ரியான கேரக்டர்ஸ்தான். ஒரே மாதியான கேரக்ட‌ரில் நடித்து பாலா சார் படத்தில் கிடைச்ச பெயரை கெடுத்துக்க விரும்பலை. இரண்டாவது காரணம் ராம்கோபால் வர்மா சா‌ரின் படம்.

அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

வர்மா சா‌ரின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கவேயில்லை. அவ‌ரிடமிருந்து அழைப்பு வந்த நேரம் நான் அவரோட ரத்த ச‌ரித்திரம் மட்டும்தான் பார்த்திருந்தேன். அதற்கப்புறம்தான் அவ‌ரின் மற்றப் படங்களைப் பார்த்தேன். என்ன மேக்கிங்? என்ன பவர்ஃபுல்லான வசனங்கள். மிரண்டு போயிட்டேன்.

படத்தின் கதை, உங்க கேரக்டர்...?

அதை இப்போதைக்கு சொல்ல முடியாது. வர்மா சார் கதையின் அவுட்லைனை சொன்ன போதே மிரண்டுட்டேன். நிச்சயமா அவன் இவனை இந்தப் படம் தாண்டி நிற்கும்.

கிளாமர் ரோலில் நடிப்பீர்களா?

நடிக்க வந்த பிறகு கிளாமர், கேரக்டர் ரோல்னு பி‌ரிச்சுப் பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். கிளாமரா நடிக்கிற அனுஷ்கா தனி ஹீரோயினா அருந்ததியில் மிரட்டியிருந்தாங்களே. அதை மாதி‌ரி எல்லா வெரைட்டியான கதாபாத்திரத்திலும் நடிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அதனால் படத்தோட கதை, என்னுடைய கேரக்டர் இரண்டை மட்டும்தான் பார்ப்பேன்.

சினிமாவில் உங்க லட்சியம் என்ன?

எல்லா கேரக்டர்ஸும் பண்ணக் கூடிய நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும்.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.