மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌ஜீத், வெங்கட்பிரபு மீண்டும் ஒன்றிணைகிறார்கள் விரைவில்.

மங்காத்தாவில் பட்டையை கிளப்பிய அ‌ஜீத் வெங்கட்பிரபு மீண்டும் ஒன்றிணைகிறார்கள்.

வெங்கட்பிரபு சூர்யா நடிக்கும் 3D படத்தை விரைவில் தொடங்க உள்ளார். மாற்றான் திரைக்கு வந்ததும் படப்பிடிப்புக்கு கிளம்பயிருக்கிறார்கள். அ‌ஜீத் பில்லா 2-வில் பிஸி. அது முடிந்ததும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் அனேகமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து இணையத்தில் தெ‌ரிவித்திருக்கும் வெங்கட்பிரபு, நீண்ட நாட்களுக்குப் பிறகு தல-யுடன் பேசினேன். விரைவில் இருவரும் இணைவோம் என்று குறிப்பிட்டு‌ள்ளா‌ர். வெங்கியின் ஆருடம் பலிக்கட்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.