இந்தியில் இழுபறியில் இருக்கும் அசின் அடிக்கடி தமிழுக்கும் நூல்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார். பொழப்பு ஓட வேண்டுமே. இவரின் சமீபத்திய குறி, கமல்.
கோச்சடையான் ஹீரோயின் யார் என்று ஊக அடிப்படையில் அசின் பெயரையும் ஒரு குறும்புக்கார நிருபர் சேர்த்திருந்தார். ரஜினி விஷயமில்லையா... பாலிவுட் வரைக்கும் பத்திக் கொண்டது. இதுவரைக்கும் கோச்சடையானில் நடிக்க அழைக்கலை. கூப்பிட்டா ஓடி வந்திடுவேன் என்று அட்வான்ஸாக கர்சீஃப் போட்டுப் பார்த்தார் அசின். எதுவும் நடக்கவில்லை.
இப்போது கமல், ஷங்கர் இணையும் படத்தில் அசினுக்கு வாய்ப்பிருப்பதாக யாரோ எழுதிப் போட மீண்டும் அசின் பரபரப்படைந்திருக்கிறார். கமல்ஜியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கேன். ஷங்கர் என்னுடைய ஃபேவரைட் டைரக்டர் என்று பெரிய கர்சீஃபாக போட்டிருக்கிறார்.
மாட்டுவாரா கமல்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.